உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் கட்டண உயர்வு வாபஸ் :முதல்வருக்கு எம்.பி., கடிதம்

மின் கட்டண உயர்வு வாபஸ் :முதல்வருக்கு எம்.பி., கடிதம்

திருப்பூர்;தமிழக முதல்வருக்கு, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில், மீண்டும் மின் கட்டணம் உயர்வு அறிவித்துள்ளது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடும் சுமையை ஏற்றியுள்ளது. மத்திய அரசு இயற்றிய சட்டத்தால், மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்பதை மாநில அரசு கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களால் வேலை வாய்ப்பு பெற்றுள்ள திருப்பூர் - கோவை மாவட்டங்கள், மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கின்றன. வேலையிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. ஜி.எஸ்.டி., - பணமதிப்பிழப்பு மற்றும் மத்திய அரசு பொருளாதார கொள்கையால், குறு, சிறு தொழில்கள் தள்ளாடி வருகின்றன; இந்நிலையில், மின் கட்டண சுமை மேலும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் யதார்த்த நிலையை புரிந்துகொண்டு, அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி