உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சந்தையில் குவியும் தக்காளி வரத்து பல மடங்கு அதிகரிப்பு

சந்தையில் குவியும் தக்காளி வரத்து பல மடங்கு அதிகரிப்பு

உடுமலை:டுமலை தினசரி சந்தைக்கு, தக்காளி வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கோடை கால மழைக்குப்பிறகு, பல ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது.தற்போது அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், உடுமலை தினசரி சந்தைக்கு, 14 கிலோ கொண்ட, 20 ஆயிரம் பெட்டிகள் வரை நாள்தோறும் வரத்து உள்ளது.உடுமலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கு அதிகளவு தக்காளி விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.நேற்றைய நிலவரப்படி, 14 கிலோ கொண்ட பெட்டி, 250 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து அதிகரிப்பால், விலையில் இந்த வாரம் மாற்றம் இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், 'அறுவடை சீசனில் தக்காளிக்கு நிலையான விலை கிடைப்பதில்லை. தொழிலாளர் தட்டுப்பாடு, இடுபொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், சாகுபடியில் நஷ்டம் ஏற்படுகிறது. நிலையான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை