உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / யூடியூப் சேனல் மீது நாடார் சங்கம் புகார்

யூடியூப் சேனல் மீது நாடார் சங்கம் புகார்

திருப்பூர்: திருப்பூர் வாழ் நெல்லை, துாத்துக்குடி மாவட்ட நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் சுரேஷ்குமார், நேற்று திருப்பூர் எஸ்.பி., யிடம் அளித்த மனு விவரம்:கடந்த 15 ம் தேதி, யூடியூப் சேனல் ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்தும், நாடார் சமுதாயத்தினர் குறித்தும் அவதுாறான கருத்துகள் பேசப்பட்டன. இது எங்கள் சமுதாய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதைப் பேசியவர் மற்றும் அதை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.அமைப்பு நிர்வாகிகள் ஆர்த்தி செல்வன், கணேஷ், அருள்ராஜ், முத்துராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி