உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாரதி கிட்ஸ் பள்ளியில் தேசிய கைத்தறி தினம்

பாரதி கிட்ஸ் பள்ளியில் தேசிய கைத்தறி தினம்

திருப்பூர்;திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள பாரதி கிட்ஸ் ேஷத்ராலயா பள்ளியில், தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை போற்றும் வகையில், மாணவர்கள் கைத்தறி புடவை, துண்டு, கைக்குட்டை மற்றும் கைவினைப் பொருட்கள் அங்காடி அமைத்திருந்தனர். அங்காடியை பள்ளி தலைவர் நாச்சிமுத்து, தாளாளர் ேஹமலதா ஆகியோர் திறந்து வைத்தனர். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பல பொருட்களை வாங்கினர்.''நாமக்கல் கவிஞரின் 'கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற சொல் படி, மாணவர்கள் மத்தியில், வாழ்க்கையின் அத்தனை சவால்கையும் ஏற்றுக் கொள்ளும் திறனை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,' என்கின்றனர் பள்ளி நிர்வாகத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை