உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாயன்மார்கள் குருபூஜை சிவனடியார்கள் வழிபாடு

நாயன்மார்கள் குருபூஜை சிவனடியார்கள் வழிபாடு

திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், புகழ்ச்சோழ நாயனார், மூர்த்தி நாயனார் குருபூஜை நடந்தது.மதுரையில் பிறந்த மூர்த்தி நாயனார், இறைவன் பூஜைக்கான சந்தனத்தை அரைத்து கொடுக்கும் சேவையை செய்து வந்தார். புகழ்ச்சோழ நாயனார் உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார். இவ்விருவரும், ஆடிக்கிருத்திகை நாளில் இறைவனுடன் கலந்தனர்.அவ்வகையில், ஆடிக்கிருத்திகை நாளான நேற்று, இவ்விரு நாயன்மார்களுக்கு, அர்த்தசாம பூஜை அடியார் திருக்கூட்டம் சார்பில், நேற்று குருபூஜை விழா நடந்தது. கல்மண்டபத்தில் எழுந்தருளும் நாயன்மார்களுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார் மற்றும் சிவனடியார்கள், திருத்தொண்டத்தொகை உட்பட, தேவார, திருவாசக பதிங்களை பாடி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை