| ADDED : ஆக 09, 2024 02:14 AM
திருப்பூர்;அ.தி.மு.க.,வில் புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை, திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதிக்குட்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.மாவட்ட அவைத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், 'புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை எவ்வாறு வழங்க வேண்டும்' என்ற ஆலோசனை வழங்கினார்.திருப்பூர் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், தெற்கு எம்.எல்.ஏ., குணசேகரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், காங்கயம் நகர செயலர் மணிமாறன், திருப்பூர் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.---திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.