உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலிதீன் பயன்பாடு கைவிட நுாதன திட்டம்

பாலிதீன் பயன்பாடு கைவிட நுாதன திட்டம்

திருப்பூர்;தடை செய்த பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதைக் காட்டிலும், பொதுமக்களையே ஊக்கப்படுத்தி இந்த செயலில் ஈடுபட வைக்கலாம் என்ற எண்ணத்தில் திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது. நிர்வாகிகள் சுரேந்திரன், சண்முகசுந்தரம், அமிர்தம் ஈஸ்வரன், பரமசிவம் மற்றும் சங்க உறுப்பினர்களின் ஆலோசனையுடன், இடுவாய், மங்கலம், சுல்தான்பேட்டை, பெரிய புத்துார், வஞ்சிபாளையம், வெள்ளஞ்செட்டிபாளையம், 63 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் 10 மளிகைக்கடைகள் தேர்வு செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பிரித்வி நிறுவனம் வழங்கும் துணிப்பை இலவசமாக வழங்கப்படுகிறது. இரண்டாவது முறை பொருள் வாங்க வரும் போது, ஒரு கூப்பன் வழங்கப்படுகிறது. கூப்பன் பெறும் வாடிக்கையாளர்களை வாரம் ஒரு நாள் குலுக்கல் முறையில் தேர்வு செய்து 300 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளனர்.கடந்த மாதம் துவங்கப்பட்ட இத்திட்டம் வரும் செப்., 3 வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.திட்டத்துக்காக 10 ஆயிரம் துணிப்பைகள் தயார் செய்து, கடைக்கு ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்பதோடு பாலிதீன் பொருட்களின் பயன்பாட்டை விட்டு விடுவதாக உறுதி கூறி வருகின்றனர். 'ஒரு சிறு பங்கு ஆற்றி, பெரும் பாதிப்பை தடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம்' என்கின்றனர் மேற்கு ரோட்டரி அமைப்பினர்.----மளிகைக்கடை வாடிக்கையாளருக்கு துணிப்பையில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ