உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரை நுாற்றாண்டாக பஸ் இல்லை

அரை நுாற்றாண்டாக பஸ் இல்லை

பல்லடம் : கடந்த, 50 ஆண்டுகளாக பச்சாங்காட்டுப்பாளையம் கிராமத்துக்கு பஸ் வசதியே இல்லை என, பல்லடம் ஒன்றிய பா.ஜ., சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று ஜமாபந்தியில் மனு அளித்த பல்லடம் பா.ஜ., ஒன்றிய தலைவர் பூபாலன் கூறியதாவது:பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, பாச்சாங்காட்டுப்பாளையம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்து, ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அருள்புரம்- கணபதிபாளையம் செல்லும் வழித்தடத்தில் உள்ள எங்கள் ஊருக்கு கடந்த, 50 ஆண்டுகளாக பஸ் வசதி கிடையாது.சில ஆண்டுக்கு முன் இயங்கி வந்த ஒரே ஒருமினி பஸ் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, இப்பகுதிக்கு பஸ்கள் வருவதில்லை. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், அருள்புரம் அல்லது கணபதிபாளையம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆட்டோவில் வந்து செல்லும் அளவுக்கு போதிய வருவாய் கிடையாது.இப்பகுதிக்கு, பஸ் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என, அரசு போக்குவரத்து கழகம், மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். இருப்பினும், இன்றுவரை பஸ் வரவில்லை.தற்போது, ஜமாபந்தியில் மீண்டும் மனு அளித்துள்ளோம். பாச்சாங்காட்டுப்பாளையம் கிராம மக்கள் பயன்பெறும் வகையில், எங்கள் பகுதிக்கு ஒரு ஒரு பஸ்ஸாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை