உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்வாய் கட்டமைப்பு இல்லை

கால்வாய் கட்டமைப்பு இல்லை

கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு தலைவர் ரஹீம் அங்குராஜ், ஜமாபந்தியில் மனு வழங்கி, அதிகாரிகளிடம் கூறியதாவது:கணியாம்பூண்டி பகுதியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை. வீதிகளுக்கு இடையே சாக்கடை கால்வாய் கட்டமைப்பு இல்லை. இதனால், மழைநீர், கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் ரோட்டிலேயே தேங்கி நிற்கிறது. வரி செலுத்த வரும் மக்களிடம், 'ஆன்லைன்' வாயிலாக வரி செலுத்திக் கொள்ளலாம் என்ற தகவல் கூட பரிமாறப்படுவதில்லை. 50 சதவீத இடங்களில் தெரு விளக்கு ஒளிர்வதில்லை. இதுபோன்ற பல பிரச்னைகள் உள்ளன.இவற்றுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை