உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரு சிசிடிவி கேமரா 3 காவலருக்கு சமம்

ஒரு சிசிடிவி கேமரா 3 காவலருக்கு சமம்

அனுப்பர்பாளையம்;தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், நெருப்பெரிச்சல் திருக்குமரன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.அங்கு குடியிருப்போர் நல சங்கம் சார்பில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதை போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு நேற்று இயக்கி ைத்து பேசியதாவது:திருப்பூரில் அதிக அளவில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் முன்மாதிரியாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு 'சிசிடிவி' கேமரா, மூன்று காவலர்களுக்கு சமமாகும். இங்கு 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் 24 நேரமும் நமக்காக இயங்கக் கூடியவை. இதன் வாயிலாக, இந்த பகுதியில் குற்றங்கள் குறையும். இதனை முன்னெடுத்தவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழச்சியில், போலீஸ் துணை கமிஷனர் ராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.---திருக்குமரன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில், அமைக்கப்பட்டுள்ள 'சிசிடிடி' கேமரா இயக்கத்தை கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு துவக்கி வைத்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை