| ADDED : ஜூன் 21, 2024 12:23 AM
உடுமலை;அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள, எமிஸ் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் பயிற்சி நடக்கிறது.நடப்பு கல்வியாண்டு முதல், அரசு நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆய்வகத்தை கையாளுவதற்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வியாண்டு முதல், இந்த இணையதள பணிகளை மேற்கொள்வதும் இப்பணியாளர்களின் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து விபரங்களும், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் எனப்படும் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவிடப்படுகிறது. பள்ளி சார்ந்த விபரங்கள் உட்பட அனைத்துமே, இதில் பதிவிடப்படுகின்றன.இதனால் பணியாளர்கள் வாயிலாக, எமிஸ் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சில நாட்களுக்கு முன் எமிஸ் பணியாளர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.உடுமலையில் - 25, மடத்துக்குளத்தில் - 13, குடிமங்கலத்தில் - 12 பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கெல்ட்ரான் நிறுவனத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கான, தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி மூன்று நாட்கள் நடக்கிறது.போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மூன்று வட்டாரத்திலும் பொறுப்பேற்றுள்ள பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. பயிற்சிகள் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படுகிறது.