உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தைக்கு ஒரு ஆண்டு வரை தாய்ப்பால் மட்டுமே சிறந்தது

குழந்தைக்கு ஒரு ஆண்டு வரை தாய்ப்பால் மட்டுமே சிறந்தது

பல்லடம்: பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம், இமைகள் கண் தான கழகம் ஆகியன இணைந்து, பல்லடம் அரசு மருத்துவமனையில், உலகத் தாய்ப்பால் விழாவை நேற்று கொண்டாடின.ரோட்டரி தலைவர் மூவேந்தன் தலைமை வகித்தார். செயலாளர் கதிரேசன், பொருளாளர் லோக சதீஸ்வரன், திட்டத் தலைவர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவர் சுபா வரவேற்றார்.தாய்ப்பால் கொடையாளர் மற்றும் ஆலோசகர் அங்குலட்சுமி கூறுகையில், 'பெரும்பாலும் ஒரு ஆண்டு வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது மிகவும் சிறந்தது. குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு, தாய்ப்பாலை ஜீரணிக்கும் அளவு தான் அதன் உடம்பில் சக்தி இருக்கும்.மாதந்தோறும் குழந்தையின் எடை கூட வேண்டும். இந்த செயல்பாடுகள் சரியாக இருந்தால், குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவு கிடைக்கிறது என்று அர்த்தம்'' என்றார். அங்கன்வாடி பணியாளர்கள், ஊட்டச்சத்து காய்கறிகள், தானியங்களை காட்சிப்படுத்தி, தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை