உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடை விடுமுறை நிறைவு கூடுதல் பஸ்கள் இயக்கம் 

கோடை விடுமுறை நிறைவு கூடுதல் பஸ்கள் இயக்கம் 

திருப்பூர்:லோக்சபா தேர்தல் காரணமாக, முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து வரும், ஜூன் 6ம் தேதி பள்ளி திறக்கப்படுமென பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறைக்கு வெளியூர் சென்ற குழந்தைகள், பெற்றோருடன் தங்கள் படிக்கும் பள்ளிகள் உள்ள மாவட்டங்களுக்கு திரும்ப, ஏதுவாக, கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஆலோசித்துள்ளது.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'கோடை விடுமுறை நிறைவு, ஜூன், 2ம் தேதி சுபமுகூர்த்தம் என்பதால், இந்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமை பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட, 30 முதல், 40 சதவீதம் கூடுதலாக பஸ்களை இயக்க மண்டல, கிளை மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ