உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அசல் மதிப்பெண் சான்று : பிளஸ் 2 மாணவர் தவிப்பு

அசல் மதிப்பெண் சான்று : பிளஸ் 2 மாணவர் தவிப்பு

திருப்பூர்:பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ல் வெளியானது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையுடன் வழங்கப்பட்டது. தேர்வு முடிவு வெளியாகி, இரண்டு மாதங்கள் (60 நாட்கள்) நிறைவடைந்தும், அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படவில்லை. வழக்கமாக, ஜூன் இறுதியில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தவறுகள் இருந்தால், திருத்தவும் வாய்ப்பு வழங்கப்படும்.ஜூலை துவங்கி, கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் கூட துவங்கிவிட்டது.இன்னமும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது,'அந்தந்த மாவட்டங்களுக்கே அசல் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படவில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை