உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓவர் லோடு வாகனங்கள்; அலறும் மக்கள்  அதிகாரிகள் ஆய்வு செய்யணும்

ஓவர் லோடு வாகனங்கள்; அலறும் மக்கள்  அதிகாரிகள் ஆய்வு செய்யணும்

உடுமலை;கிராம இணைப்பு ரோடுகளிலும், மாவட்ட முக்கிய ரோடுகளிலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதி ரோடுகளில், ஓவர் லோடு வாகனங்களால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, 'டிப்பர்' லாரிகளில், கிராவல் மண்ணை அதிகளவு ஏற்றி வருகின்றனர்.ஒவ்வொரு வேகத்தடையிலும், இத்தகைய லோடு லாரிகள் ஏறி இறங்கும் போது, பின்னால், வரும் வாகனங்கள் மீது மண் விழுவது தொடர்கதையாக உள்ளது. இதனால், சில விபத்துகளும் ஏற்படுகிறது.இதே போல், தேங்காய் நார், தேங்காய் தொட்டி, தேங்காய் மட்டையை வாகனத்தின் கொள்ளளவை விட கூடுதலாக ஏற்றி வருவதால், நகர போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்லும் போது, ரோட்டில் உள்ள மின் வயர்களில் உரசி தீப்பிடித்து, விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.தற்போது மாவட்ட முக்கிய ரோடான பெதப்பம்பட்டி, செஞ்சேரிமலை ரோட்டில், கருங்கற்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் அதிகளவு செல்கிறது.அதிக பாரம் உள்ள இந்த வாகனங்கள், குறுகலான ரோட்டில் அதி வேகத்தில், செல்வதால், போக்குவரத்து பாதித்து விபத்து ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் கிராம இணைப்பு ரோட்டில் செல்வதால், அதிக பாரத்தால் ரோடும் சேதமடைகிறது.இது குறித்து வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை