| ADDED : ஜூலை 01, 2024 01:58 AM
பல்லடம்;பல்லடம் பஸ் ஸ்டாண்ட், 'குடி'மகன்களின் படுக்கையறையாக மாறிவருகிறது.பல்லடம் பஸ் ஸ்டாண்டில், அமர்வதற்குதான் இடமில்லை என்றால், நிற்பதற்கு கூட பயணிகள் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'ஏராளமான பள்ளி - கல்லுாரி மாணவ மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர், பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் வருபவர்கள், பஸ் ஏறும் வரை நடைபாதையில்தான் காத்திருக்க வேண்டியுள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்பு ஒரு புறம் இருக்க, அடிக்கடி குடித்துவிட்டு நடைபாதையில் 'மட்டை'யாகும் 'குடி'மகன்களால், பஸ் ஸ்டாண்ட் 'குடி'மகன்களின் படுக்கையறையாக மாறி வருகிறது. வாந்தி எடுத்தும், ஆடைகள் கலைந்தபடியும் நடைபாதையில் விழுந்து கிடப்பது அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது. இதை தடுக்க வேண்டிய போலீசாரம் கண்டு கொள்வதில்லை.