உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போனை மீட்க முயன்ற பயணி ரயிலில் இருந்து விழுந்து காயம் இருவர் கைது: போன் பறிமுதல்

போனை மீட்க முயன்ற பயணி ரயிலில் இருந்து விழுந்து காயம் இருவர் கைது: போன் பறிமுதல்

திருப்பூர்:திருப்பூரில் ரயில் பயணியிடம் மொபைல் போனை பறித்த போது, பயணி கீழே விழுந்து காயமடைந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், இருவரை கைது செய்தனர்.கேரளாவை சேர்ந்தவர் முகமது சலீம், 35; பெங்களூரில் பெல்ட் கடை நடத்தி வருகின்றார். கடந்த, 8ம் தேதி பெங்களூர் செல்வதற்காக, திரூரிலிருந்து - சேலத்துக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். ரயில் திருப்பூரை அடைந்த போது, வாலிபர் இருவர் முகமது சலீம்மை தாக்கி, மொபைல் போனை பறித்து கொண்டு தப்பினர். அவர்களை பிடிக்க முயன்ற போது, ரயிலில் இருந்து தவறி விழுந்து முகமது சலீமிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.இதையடுத்து, தனிப்படை போலீசார் ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட முக்கிய சந்திப்பு பகுதியில் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.அதில், திருப்பூர் நெருப்பெரிச்சலை சேர்ந்தவர் முருகானந்தம், 28, ராமலிங்கம், 28 என, இருவரும் வழப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ