உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குளு, குளு சீதோஷ்ணம் மழையால் மக்கள் மகிழ்ச்சி

குளு, குளு சீதோஷ்ணம் மழையால் மக்கள் மகிழ்ச்சி

உடுமலை;உடுமலை பகுதியில், பரவலாக பெய்த மழையால், சீதோஷ்ண நிலை குளு, குளுவென மாறியது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வடகிழக்கு பருவமழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டது; நிலத்தடி நீர் மட்டமும் குறைந்தது. இதற்கு தீர்வாக, கோடை மழை பெய்து, சற்று ஆறுதல் அளித்தது. தென்மேற்கு பருவமழையும் முன்னதாகவே துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. மாலை நேரத்தில் மட்டும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்றும் பகலில் மேககூட்டம் சூழ்ந்ததால், அதிக மழை பொழிவு இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் லேசான மழை மட்டும் பெய்தது. மடத்துக்குளம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில், கனமழை பெய்துள்ளது. உடுமலை நகரப்பகுதியில் பெய்த மழையால், குளு, குளுவென சீதோஷ்ண நிலை மாறியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி