உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொள்ளாச்சி ரோட்டுக்கு வழி பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி ரோட்டுக்கு வழி பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பல்லடம்:பல்லடத்தில், பொள்ளாச்சி ரோடு, நால்ரோடு சிக்னல் அருகே, தரைமட்ட பாலம் விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக, பொள்ளாச்சி ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்று வழித்தடம் மூலம் வாகனங்கள் சென்று வருகின்றன.பொள்ளாச்சி, உடுமலை ரோடு வாகன போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டுக்கும் பிரதானமாக உள்ளது. தாலுகா அலுவலகம் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளதால், ஆதார், ரேஷன் கார்டு, இ--சேவை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.இவ்வாறு தாலுகா அலுவலகம் வரும் முதியோர், தாய்மார்கள், பெண்கள் உள்ளிட்டோர். மாற்று வழியை பயன்படுத்தி வரவேண்டி உள்ளது.பொதுமக்கள் சிலர் கூறியதாவது:பல்லடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தாலுகா அலுவலகம் அரை கி.மீ., துாரம் மட்டுமே உள்ளது. பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள், பொள்ளாச்சி ரோடு பாலம் வேலை காரணமாக, மாற்று வழி பயன்படுத்தி 2 கி.மீ., சுற்றி வர வேண்டி உள்ளது.இதற்காக, ஆட்டோவில் சென்றால், 100 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. எனவே, பாலம் கட்டுமான பணி முடியும் வரை, பாதசாரிகள் நடந்து செல்ல, நடைபாதை ஏற்படுத்த நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி