உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூச்சு முட்டும் புகையால் மக்கள் அவதி

மூச்சு முட்டும் புகையால் மக்கள் அவதி

திருப்பூர்;ஒயர்களை எரிப்பதால் எழும் துர்நாற்றம் நிறைந்த புகையால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.ஒயரில் உள்ள செம்பு கம்பிகள், பழைய இரும்பு கடையில் எடை கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது. பழைய பொருட்களை வாங்குவோர், வீடு வீடாக வாங்கி வருவோரும், ஒயரிங் செய்ய பயன்படுத்தி பழைய ஒயர்களை வாங்கி செல்கின்றனர்.அவ்வகை ஒயர்களை தீ வைத்து எரித்து, செம்பு கம்பிகளை தனியே எடுத்து விற்கின்றனர். குறிப்பாக, தீ வைத்து எரிக்கும் போது, பிளாஸ்டிக் மேற்பரப்பு எரியும் போது, கடும் துர்நாற்றத்துடன் புகை வெளியேறுகிறது.அந்த புகையை சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. திருப்பூர் நொய்யல் ஆற்றுக்குள், மர்மநபர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், ஒயர்களுக்கு தீ வைத்து எரிப்பதால், நகரப்பகுதியில் பயணிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுகிறது. நொய்யல் ஆறும் மாசுபடுகிறது.எனவே, இனிவரும் நாட்களில், நொய்யல் ஆற்றுக்குள் பழைய ஒயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை