உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலைக்கு விடுப்பு எடுத்து மரக்கன்று நட்ட மக்கள்

வேலைக்கு விடுப்பு எடுத்து மரக்கன்று நட்ட மக்கள்

பல்லடம்:பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில், நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, அரசு புறம்போக்கு நிலத்தில், இப்பகுதி மக்கள் மரக்கன்று நடவு செய்ய, பல்லடம் வனம் அமைப்பிடம் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதன்படி பல்வேறு வகையான, 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. விநாயகர் கோவிலுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டு, முதல் கட்டமாக அரசு, வேம்பு மரங்கள் நடப்பட்டன. 'வனம்' அமைப்பின் இணை இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், ராம்நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் சக்திவேல் கார்த்திக் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்காக, இப்பகுதி மக்கள் வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை