உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்திமலை கோவிலுக்கு அனுமதி பஞ்சலிங்கம் அருவிக்கு தடை நீடிப்பு

திருமூர்த்திமலை கோவிலுக்கு அனுமதி பஞ்சலிங்கம் அருவிக்கு தடை நீடிப்பு

உடுமலை;மழை குறைந்த நிலையில், திருமூர்த்திமலை கோவிலுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பஞ்சலிங்கம் அருவிக்கு, இரண்டாவது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில், நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக, மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, மலையடிவாரத்திலுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் வெள்ள நீர் சூழ்ந்தது.இதனால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில். நேற்று மழை குறைந்ததால், கோவில் பகுதியிலுள்ள தோணியாற்றில் நீர் வரத்து குறைந்தது.இதனால், அமணலிங்கேஸ்வரர் கோவில் துாய்மை செய்து, நேற்று சுவாமிகளுக்கு வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஆனால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில், வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணியர், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.அருவிக்கு செல்லும் வழித்தடம் அடைக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ