| ADDED : ஜூன் 29, 2024 02:21 AM
பல்லடம்;பல்லடம் பொன்காளியம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட அறநிலையத்துறை அனுமதி வழங்கியதற்கு, பக்தர்கள் வரவேற்றுள்ளனர். பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில், பல ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது.கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட அறநிலையத்துறை அனுமதி வழங்க வேண்டும்; இதற்கான நிதி திரட்ட வேண்டும் என பக்தர்கள் ஆலோசித்தனர்.பக்தர்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப, தற்போது, ராஜகோபுரம் கட்ட அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நசட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, அறநிலையத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பக்தர்கள் கூறுகையில், ''கோவிலுக்கு சில ஆண்டுகள் முன், ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கி பல்வேறு இடையூறுகள் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, ராஜகோபுரம் கட்ட அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றனர்.---பல்லடம் பொன்காளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் பணி பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது.