மனைவிக்கு கொடுமை; கணவர் கைது
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்தவர் பவித்ரா, 29. கடந்த, 2022ம் ஆண்டு சத்தியமங்கலத்தை சேர்ந்த கிஷோர்குமார், 34 என்பவருடன் திருமணம் நடந்தது. வரதட்சணையாக, 20 சவரன் நகையும், கணவருக்கு, ஆறு சவரன் நகையும் கொடுத்தனர்.திருமணமாகி கொஞ்ச நாட்களிலேயே குடும்ப பிரச்னை ஏற்பட்டு மனைவியை அடித்து துன்புறுத்தினார். கோவையில் உள்ள தோழியை திருமணம் செய்ய போவதாக கணவர் கூறினார்.தொடர்ந்து, தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக, கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.இதுதொடர்பாக, ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கணவர் கிஷோர்குமாரை கைது செய்தனர். குடும்பத்தினரிடம் விசாரிக்கின்றனர். சிறுமியிடம் அத்துமீறல்; வாலிபர் கைது
காங்கயத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு, திருப்பூரை சேர்ந்த அருண்குமார், 23 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.ஆசை வார்த்தை கூறி பழகி வந்த வாலிபர், திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி, சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுதொடர்பாக, வாலிபர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். சிறுமியிடம் சீண்டல்;முதியவர் கைது
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர், 10 வயது சிறுமி; ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். அப்பகுதியை சேர்ந்த முதியவர் மணிகண்டன், 65, இரு நாட்களுக்கு முன் சிறுமி விளையாடி கொண்டிருந்ததை பார்த்தார். சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.இதுகுறித்து பெற்றோருக்கு தெரிய வந்தது. புகாரின் பேரில், மணிகண்டன் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்து அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.