உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

மதுபாட்டிலில் தாக்கிய தொழிலாளி கைதுகாங்கயத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு, 45; ஆயில் மில்லில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பருடன், அருகில் உள்ள கோவில் வளாகத்தில் நண்பருடன் துாங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த வயக்காட்டு புதுாரை சேர்ந்த பிச்சைமுத்து, 58 என்பவர், சாமிகண்ணுவிடம் மது அருந்த பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுக்கவே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிச்சைமுத்து மதுபாட்டிலால் சாமிகண்ணுவை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், பிச்சைமுத்துவை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.டிப்பர் லாரி மோதி முதியவர் பலிசாமளாபுரம், வி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 72. நேற்று முன்தினம் டூவீலரில் அப்பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.வேன் மோதி முதியவர் பலிஊத்துக்குளியை சேர்ந்தவர் ராசன், 76. இவர் டூவீலரில் கொடியம்பாளையம் - செங்கப்பள்ளி ரோட்டில் சென்றார். பூசாரிபாளையத்தில் ரோட்டை கடக்க டூவீலரில் நின்ற போது, அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதியம் இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ