உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்டைக்கு தேவை பராமரிப்பு

குட்டைக்கு தேவை பராமரிப்பு

பல்லடம்;பல்லடம் அருகே, சின்னவடுகபாளையம் கிராமத்தில், நீர் ஆதார குட்டை உள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் மூலம், இக்குட்டை, 3.50 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது.குட்டையை சுற்றிலும், பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு, குட்டை முழுவதுமாக துார்வாரப்பட்டது. இக்குட்டையை மேலும் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: சுற்றுவட்டார பகுதிகளுக்கு சின்ன வடுகபாளையம் குட்டை நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இக்குட்டை துார்வாரப்பட்டு சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. ஆனால், குட்டைக்கு நீர் எடுத்து வரும் நீர் வழித்தடங்கள் சரிவர துார்வாரப்படாததால், சமீப நாட்களாக மழை பெய்தும் குட்டைக்கு நீர் வரத்து இல்லை.எனவே, நீர் வழித்தடங்களை மீட்டெடுத்து குட்டையில் மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், நடைபாதை பகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும். குட்டையைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பசுமையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ