உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். ஆடை உற்பத்தி, ஜவுளி, நகை கடை, ஆட்டோமொபைல் உள்பட பல்வேறு துறைசார்ந்த 28 நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில், மாற்றுத்திறனாளிகள், 5 பேர் உள்பட ஆண், பெண் மொத்தம் 56 பேர், வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ