உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 'காமராஜர் வாழ்க்கை வரலாறு' குறித்து, தலைமையாசிரியர் தாரணி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அவரின் கல்விப்பணிகள், ஆட்சிக்காலம் குறித்த சிறந்த வீடியோக்களை ஆசிரியர் கண்ணபிரான் திரையிட்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, காமராஜர் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் காமராஜர் புகைப்படத்துக்கு மாலை அணிவித்தனர். பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.* சாளரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன், பழனிச்சாமி தலைமை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் சரவணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி, மாறுவேடம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர் பயிற்றுனர்கள், பெற்றோர், பொதுமக்களும் பங்கேற்றனர்.* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் ஜெகன்னாத ஆழ்வார்சாமி தலைமை வகித்தார். தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். 'காமராஜரின் ஆட்சி பொற்காலம்' என்ற தலைப்பில் மாணவர்கள் பேசினர்.தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் காமராஜரின் பெருமைகள் குறித்து பேசினார். பள்ளி மாணவர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.மாணவர்களுக்கு பேச்சு, நடனம், கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இயற்பியல் ஆசிரியர் மகுடேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.* உடுமலை ஆரண்யா அறக்கட்டளை, ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளி சார்பில், கல்வி வளர்ச்சி நாளையொட்டி, பள்ளி மாணவர்கள் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 100 மரக்கன்றுகளை நட்டனர்.மாணவர்கள், ஆசிரியர்கள் கோடந்துார் சென்று அங்குள்ள அரசு துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கினர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில், காமராஜர் சாதனைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.வனச்சரக அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். வனவர் நிமல் மற்றும் வனத்துறை அலுவலர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி மக்கள்தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் சகுந்தலாமணி, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.* உடுமலை எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் மாலதி வரவேற்றார்.பள்ளி தலைமையாசிரியர் பூரணி முன்னிலை வகித்தார். பள்ளி முன்னாள் ஆசிரியர் நிர்மலா மாணவர்களுக்கு நாட்டுநலப்பணி திட்ட சீருடைகளை வழங்கினார். ஆசிரியர் சுரேஷ் காமராஜரின் சிறப்புகள் குறித்து பேசினார்.மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் வளர்மதி நன்றி தெரிவித்தார். ஆசிரியர் புவனா தொகுத்து வழங்கினார்.* கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் காமராஜர் புகைப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செய்தனர். பள்ளி தமிழாசிரியர் சங்கரராமேஸ்வரி காமராஜர் குறித்த செய்திகளை விளக்கினார்.மாணவர்கள் காமராஜர் குறித்த குறுநாடகம் நடத்தினர். கவிதை, பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி