உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உற்பத்தி மேம்படுத்த பயிற்சி டெமடோ சங்கம் திட்டம்

உற்பத்தி மேம்படுத்த பயிற்சி டெமடோ சங்கம் திட்டம்

அனுப்பர்பாளையம்:திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் (டெமடோ) சங்க ஒன்பதாம் ஆண்டு மகாசபை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். செயலாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். டி.ஐ.ஐ.சி., திருப்பூர் கிளை நிர்வாகி லட்சுமி நாராயணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்கள் பில் தொகையை 45 நாட்களுக்குள் பெறலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். அதில் தளர்வுகள் மற்றும் மாற்றங்கள் அளிக்கக்கூடாது. தமிழக அரசின் மின் கட்டண உயர்வால், தொழில் நிறுவனங்கள் மிகுந்த பாதிப்பை அடைகிறது. எனவே, தொழிலை காக்க மின் கட்டண உயர்வை ஒத்தி வைக்க வேண்டும். திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும், பயிற்சி மையம் ஒன்றை, மற்ற அமைப்புடன் இணைந்து துவக்குவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க பொருளாளர் செல்வராஜ், நன்றி கூறினார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி