உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொது இடத்தில் அசுத்தம் செய்ய தடை; குடியிருப்போர் சங்கம் சபாஷ் முயற்சி

பொது இடத்தில் அசுத்தம் செய்ய தடை; குடியிருப்போர் சங்கம் சபாஷ் முயற்சி

திருப்பூர் : திருப்பூர் நெருப்பெரிச்சலில் கட்டப்பட்டுள்ள, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திருக்குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.செயலாளர் பழனிகுமார் வரவேற்றார். சங்க தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் அருளானந்தன், அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்; குடியிருப்பை சுற்றியுள்ள பொது இடங்களில் குப்பை போடுவது, அசுத்தம் செய்வது, மது அருந்துவது, புகைபிடிப்பது, ஆபாச வார்த்தை பேசுவது போன்றவற்றுக்கு தடை விதித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை சங்கத்தின் சார்பில் சிறப்பாக நடத்துவது; வீட்டு வரியை குறைப்பது தொடர்பான கோரிக்கையை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது; குடியிருப்பு பகுதியில் நுாலகம், சுகாதார நிலையம் அமைத்து தர, அரசை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

பொறுப்புணர்வுக்கு பரிசு

குடியிருப்பு பகுதியை நிர்வகிக்கும் முழு பொறுப்பும் குடியிருப்போர் நலச்சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மாதந்தோறும் ஒவ்வொரு வீடுகளின் உரிமையாளர்களும், 250 ரூபாய் பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த தொகையை வைத்தே குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், தவறாமல் பராமரிப்புக் கட்டணம் செலுத்திய குடியிருப்புவாசிகளுக்கு, சங்கத்தின் சார்பில் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ