உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அளவீடு செய்ய தயக்கம் பொதுமக்கள் புகார்

அளவீடு செய்ய தயக்கம் பொதுமக்கள் புகார்

பல்லடம்;பல்லடம் ஒன்றியம், பருவாய் பொதுமக்கள் கூறியதாவது:பருவாய் கிராமத்தில் உள்ள மணியக்காரர் வீதியை மாணவ மாணவியர், பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழித்தடம் மட்டுமின்றி, ஊரில் யாரேனும் இறந்தால் சடலங்களும் இதே வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. வீதி மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வழித்தடத்தை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழித்தடம் முழுவதையும் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு, வருவாய்த் துறையிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளோம். 60 நாளாகியும் இன்றுவரை அளவீடு பணி மேற்கொள்ளப்படவில்லை. விரைவில் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை