உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மும்பையை புரட்டிப் போட்ட மழை :சரக்கு போக்குவரத்தில் பாதிப்பில்லை... திருப்பூர் பனியன் உற்பத்தியாளர் நிம்மதி

மும்பையை புரட்டிப் போட்ட மழை :சரக்கு போக்குவரத்தில் பாதிப்பில்லை... திருப்பூர் பனியன் உற்பத்தியாளர் நிம்மதி

திருப்பூர்:கனமழை காலம் என்பதால், மும்பை வெள்ளத்தால், பனியன் ஆடை உற்பத்தியில் பெரிய பாதிப்பு இருக்காது என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக, நகரப்பகுதியில், விமான நிலையம், ரயில்நிலையம் உட்பட, அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளன.திடீர் மழை காரணமாக, திருப்பூரில் இருந்து ஏற்றி சென்ற பனியன் ஆடைகள் உரிய இடத்தை சென்றடைந்ததா? மாநில எல்லையோரமாக முகாமிட்டிருக்குமா? என்று, இங்குள்ள உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.கடுமையான வெள்ள பாதிப்பு என்பதால், பனியன் ஆடை வியாபாரம் இயல்பு நிலை திரும்ப நீண்ட நாட்களாகுமா என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் - மும்பை இடையேயான பனியன் வர்த்தகத்தில், ஜூன் - ஜூலை மாதம் என்பது மந்தமான காலம். எனவே, இந்த சீசனில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டாலும், பனியன் தொழிலுக்கு பெரிய பாதிப்பு இருக்காது; அடுத்தது, தீபாவளி பண்டிகை ஆர்டர்களுக்காக காத்திருப்பதாக, பனியன் ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ