உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொன்காளி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட ஆயத்தம்!

பொன்காளி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட ஆயத்தம்!

பல்லடம்:பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், பழமை வாய்ந்த பொன்காளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி துவங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட அறநிலையத்துறை சமீபத்தில் அனுமதி வழங்கியது. தற்போது, இதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. முன்னதாக, கோவில் வளாகத்தில், தனியார் பயன்பாட்டில் இருந்து வந்த குடியிருப்பு அகற்றப்பட்டு, 2 சென்ட் இடம் கையகப்படுத்தப்பட்டது. விரைவில், தனியார் பயன்பாட்டில் உள்ள மீதமுள்ள இடங்களும் கையகப்படுத்தப்பட்டு, ராஜகோபுரம் கட்டும் பணிகள் துவங்கப்படும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ---பொன் காளியம்மன் கோவிலில் தனியார் வசமிருந்த இடம் கையகப்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ