உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தம்பதி தற்கொலை முயற்சி வாகனத்தை மீட்டு கொடுங்க! தம்பதி தற்கொலை முயற்சி

தம்பதி தற்கொலை முயற்சி வாகனத்தை மீட்டு கொடுங்க! தம்பதி தற்கொலை முயற்சி

திருப்பூர்;ஊத்துக்குளி தாலுகா, குன்னத்துாரை சேர்ந்த மூர்த்தி, 28. இவர், மனைவி வைதேகி, 24 மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் நேற்று மதி யம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.கலெக்டர் அலுவலக வளாக போர்டிகோ பகுதியில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். தற்கொலை முயற்சி குறித்து, வீரபாண்டி போலீசார் விசரித்தனர்.மூர்த்தி, நிதி நிறுவனத்தில் கடன் பெற்று சரக்கு வாகனம் வாங்கியுள்ளார். விபத்தில் உடல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, வாகனத்தை, திருச்சியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு வாடகைக்கு வழங்கியுள் ளார். மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகை வழங்கவேண்டும் என, ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.ஆனால் கணேசன், பணம் வழங்காததோடு, வாகனத்தையும் திருப்பித்தர மறுப்பதால் மூர்த்தி, தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ