| ADDED : ஜூலை 10, 2024 01:45 AM
உடுமலை;உடுமலை - பழநி ரோட்டில், இருபுறமும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விபத்து அபாயம் ஏற்படுகிறது.உடுமலை - பழநி ரோடு தேசிய நெடுஞ்சாலையில், பஸ் ஸ்டாண்ட் முதல் ஐஸ்வர்யா நகர் வரை தொடர்ந்து ரோடு ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.சந்தைக்கு செல்லும் வாகனங்களும், சரக்கு வாகனங்களும் ரோட்டின் இரண்டு பகுதியிலும் பாதி வரை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இவ்வாறு ரோட்டில் இருக்கும் ஆக்கிரமிப்பால், மற்ற வாகனங்கள் செல்வதற்கு நெடுஞ்சாலையில் குறுகலான இடம் மட்டுமே உள்ளது. பஸ் செல்லும் போது, மற்ற வாகனங்கள் ஒதுங்கி செல்வதற்கும் தடுமாறுகின்றன.நடந்து செல்லும் மக்களின் நிலை மேலும் பரிதாபமாக உள்ளது. வாகனங்கள் வருவதையும் பார்க்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவின் அருகே போக்குவரத்து போலீசார் கண்காணிக்கின்றனர்.இருப்பினும், சரக்கு வாகனங்கள் தொடர்ந்து நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இரவு நேரங்களில் போதிய வெளிச்சமும் இல்லாமல், ரோட்டோரமாக செல்லும்போது வாகன ஓட்டுநர்கள் நிற்கும் சரக்கு வாகனங்களின் மீது மோதும் நிலைக்கு செல்கின்றனர்.போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.