தடுமாற்றம்சந்திராபுரம் - செவந்தாம்பாளையம் ரோட்டில் வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயின்ட் அடிக்க வேண்டும். வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- மோகன், செவந்தம்பாளையம்.மந்தம்ஆலாங்காடு, சாயப்பட்டறை வீதியில் கால்வாய் அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. குடிநீர் குழாய்களை சரிசெய்யாமல் பணி மேற்கொள்கின்றனர்.- கந்தசாமி, ஆலாங்காடு. (படம் உண்டு)அவசர கதிவெள்ளியங்காடு, திரு.வி.க., நகரில் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகிறது. சரிசெய்யாமல் அவசர கதியில் சாலைப்பணியை துவக்குகின்றனர்.- கர்ணன், வெள்ளியங்காடு. (படம் உண்டு)ஆபத்துபூலுவபட்டி - நெருப்பெரிச்சல் ரோடு, அரச மரத்தடி விநாயகர் கோவில் அருகே, சாக்கடை சிலாப் சேதமாகியுள்ளது. எந்நேரமும், யாராவது விழுந்து விடும் அபாயம் உள்ளது.- மனோகரன், அம்மன் நகர். (படம் உண்டு)நாய்த்தொல்லைபூலுவபட்டி - ஊத்துக்குளி ரோடு, படையப்பா நகர், கே.ஜி.எஸ்., கார்டன் பகுதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது.- பாண்டியராஜ், கே.ஜி.எஸ்., கார்டன். (படம் உண்டு)வீண்திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் எதிர்ப்புற வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது.- பொன்னுசாமி, ஊத்துக்குளி ரோடு (படம் உண்டு)அவிநாசி - திருப்பூர் மெயின் ரோடு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலையும் சேதமடைந்து வருகிறது.- தென்னவன், அவிநாசி.சபாபதிபுரம் ரயில்வே பாலத்தின் மேல் குழாய் உடைந்து தண்ணீர், நாள் முழுதும் வழிந்தோடுகிறது. சரிசெய்ய வேண்டும்.- சந்தோஷ் ராகவ், சபாபதிபுரம்.சுகாதாரக்கேடுபல்லடம், கணபதிபாளையம் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே குப்பை நிரம்பியுள்ளது. குப்பை அள்ள வேண்டும்.- சிவம், கணபதிபாளையம். (படம் உண்டு)இருள்கொடுவாய் கிழக்கு வீதி, சந்தை ரோடு, அண்ணா நகர், மகிரிஷி நகர் பகுதிகளில் ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- சதீஷ்குமார், கொடுவாய். (படம் உண்டு)திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப், உயர்மட்ட பாலத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. திருட்டு பயத்துடன் பாதசாரிகள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.- சுப்ரமணி, அணைக்காடு. (படம் உண்டு)அடைப்புஅனுப்பர்பாளையம், 10வது வார்டு, மாரியம்மன் கோவில் வீதியில், ஏ.வி.பி., ரோட்டில் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- சீனிவாசன், அனுப்பர்பாளையம். (படம் உண்டு)இடையூறுதிருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் ஸ்டாப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தொட்டியை இடமாற்ற வேண்டும்.- தவச்செல்வம், குமார் நகர். (படம் உண்டு)ரியாக் ஷன்தற்காலிக சீரமைப்புதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் பாலத்தின் கீழ் குழாய் உடைந்து தண்ணீர் சேதமானது. 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், தற்காலிகமாக மண் கொட்டி சீரமைத்துள்ளனர்.- நடராஜன், தியாகி குமரன் காலனி. (படம் உண்டு)கால்வாய் சுத்தம்திருப்பூர், பாரப்பாளையம், திருநகர் இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியிருந்தது. 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.- அக் ஷயா, பாரப்பாளையம். (படம் உண்டு)