| ADDED : ஜூன் 20, 2024 05:15 AM
திருப்பூர் : திருப்பூரில் நெடுஞ்சாலை சாலைப்பணியாளர்கள், தண்டோரா முழக்கப் போராட்டம் நடத்தினர்.திருப்பூர், நெடுஞ் சாலைத்துறை கண் காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன், நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், மண்டல அளவிலான தண்டோரா முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.தாராபுரம் கோட்ட பொருளாளர் முருகசாமி, வரவேற்றார். கோட்ட தலைவர்கள் வெங்கிடுசாமி (தாராபுரம்), கருப்பன் (திருப்பூர்), செவந்திலிங்கம் (கரூர்), செங்கோட்டையன் (ஈரோடு) ஆகியோர் தலைமை வகித்தனர். கோட்ட பொருளாளர்கள் அண்ணாதுரை, பாபு, சிவகுமார் முன்னிலை வகித்தனர்.மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் வாயிலாக, 3,500க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் மற்றும் சாலை ஆய்வாளர் பணியிடம் ஒழிக்கப்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். கிராம இளைஞர் களுக்கு, நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.கோட்ட செயலாளர்கள் பாலசுப்ரமணி, தில்லையப்பன், ராமன், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். மாநில தலைவர் பாலசுப்ரமணியன், பங்கேற்று, பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி பேசினார்.சாலைப்பணியாளர் சங்க நிர்வாகிகள், உறுப் பினர்கள் பங்கேற்றனர்.