உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சமஸ்கிருத மொழி ஆரோக்கிய வழி

சமஸ்கிருத மொழி ஆரோக்கிய வழி

திருப்பூர்;திருப்பூர் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில், சமஸ்கிருத தினம், துளிர் நர்சரி பள்ளியில் கொண்டாடப்பட்டது. கோட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். கடந்த சில வாரங்களாக, சமஸ்கிருத பயிற்சி பெற்றவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதுசிறப்பு விருந்தினராக பங்கேற்ற தென்தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பேசுகையில், ''நமது ரத்த செல்களிலேயே சமஸ்கிருதம் கலந்துள்ளது; சமஸ்கிருதத்தில் பேசும் போது, நமக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியத்தை உருவாக்குகிறது. தமிழ்மொழியிலும், சமஸ்கிருத சொற்கள் கலந்துள்ளன. ஆட்சிமொழி, சமஸ்கிருதமா, ஹிந்தி மொழியா என்று ஓட்டெடுப்பு நடத்திய போது, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஹிந்தி வெற்றி பெற்றது. டாக்டர் அம்பேத்கரும், சமஸ்கிருதத்துக்கு ஆதரவாக இருந்தார். சமஸ்கிருதத்தை மீண்டும் வளர்க்கும் வகையில் பயிற்சி அளித்து வருகிறோம்,'' என்றார்.சமஸ்கிருத பேச்சுப்போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ