உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை முழுக்க கழிவுநீர் வெளியேற்ற திண்டாட்டம்

சாலை முழுக்க கழிவுநீர் வெளியேற்ற திண்டாட்டம்

அனுப்பர்பாளையம்:ஆனந்தா அவென்யூ குடியிருப்பு பகுதியில் சாலை முழுக்க கழிவுநீராக காணப்பட்டதால், மோட்டார் மூலம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. வீடுகளில் உறிஞ்சுகுழி அமைக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்திருப்பூர், 25வது வார்டு காவிலிபாளையம் பகுதியில் உள்ள ஆனந்தா அவென்யூ குடியிருப்பு பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.கழிவுநீர் செல்ல 'டிஸ்போஸல் பாயின்ட்' இல்லாததால், ரோட்டில் குளம் போல் தேங்கிவந்தது. சுகாதாரக்கேடும் நிலவியது. தீர்வு காணக்கோரி வார்டு கவுன்சிலர் தங்கராஜ், முறையிட்டு வந்தார். முதல் மண்டல உதவி கமிஷனர் கனகராஜ், சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் கோகுலநாதன், உதவி பொறியாளர் கணேஷ் ஆகியோர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.'பாதாள சாக்கடை திட்டம் வரும்வரை அனைவரும் வீட்டின் முன்பு உறிஞ்சு குழி அமைத்து, கழிவுநீர் ரோட்டுக்கு வராத வாறு பார்த்து கொள்ள வேண்டும். உறிஞ்சுகுழி அமைக்காதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தனர்.ரோட்டில் தேங்கி இருந்த கழிவு நீரை மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். ரோட்டை சீர் செய்யும் பணி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ