திருப்பூர்:தெற்கு குறுமைய பால்பேட்மின்டன் போட்டி, காங்கயம் ரோடு, ஜெய்நகர், வித்யவிகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பதினான்கு வயது பிரிவு இறுதி போட்டியில், கருப்பகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, 2- 0 என்ற செட் கணக்கில், வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. பதினேழு வயது பிரிவில், வித்யவிகாசினி பள்ளி, 2 - 0 என்ற செட் கணக்கில், கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி அணியை வென்று காட்டியது.மாணவியர், 14 வயது பிரிவில், கருப்பகவுண்டன் பள்ளி முதலிடம், வித்யவிகாசினி 2 வது இடம், 17 வயது பிரிவில், வித்யவிகாசினி முதலிடத்தை தட்டி துாக்கியது. கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி 2 வது இடம் பெற்றது. பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை, 19 வயது பிரிவில் எதிர்கொண்ட வித்ய விகாசினி அணி, 2-0 என்ற செட் கணக்கில் வென்றது.ஜெய்வாபாய் அசத்தல்வடக்கு குறுமைய மாணவியர் கபடி போட்டி, 14 மற்றும், 17 வயது பிரிவில், 14 அணிகளும், 19 வயது பிரிவில், ஆறு அணிகள் பங்கேற்றன. 14 வயது பிரிவில் வி.கே., அய்யங்காளிபாளையம் பள்ளி அணி, 23 - 16 என, ஜெய்வாபாய் பள்ளி அணியை வென்றது.19 வயது பிரிவில், போட்டி துவங்கியது முதலே அதிரடி காட்டிய ஜெய்வாபாய் பள்ளி அணி, 20 - 12 என்ற புள்ளிக்கணக்கில், வி.கே., அய்யங்காளிபாளையம் அரசு பள்ளி அணியை வென்று காட்டியது. 17 வயது பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி அணி 21 - 19 என்ற புள்ளிக்கணக்கில் பூலுவபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை வென்றது.கால்பந்து ஒத்திவைப்புதிருப்பூர், கணியாம்பூண்டி, மைக்ரோ கிட்ஸ் பள்ளியில், திருப்பூர் வடக்கு குறுமைய, 17 வயது, மாணவர் கால்பந்து போட்டியில், 13 அணிகள் பங்கேற்றன. லீக் முடிந்து, காலிறுதி சுற்றுகள் நடந்த வந்த நிலையில், மழை குறுக்கிட்டதால், அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள், வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.திருப்பூர், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், தெற்கு குறுமைய பதினான்கு வயது பிரிவு கால்பந்து போட்டி நடந்தது. 14 அணிகள் பதிவு செய்து விளையாடின; மழையால் இறுதி போட்டி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.---தெற்கு குறு மையம் சார்பில் திருப்பூர், ஜெய் நகர், வித்ய விகாசினி பள்ளியில் நடந்த பால்பேட்மின்டன் போட்டியில், கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி - வித்ய விகாசினி பள்ளி அணியினர் இடையேயான ஆட்டம்.வடக்கு குறு மையம் சார்பில் சிறுபூலுவபட்டி ஜெய் சாரதா பள்ளியில் நடந்த கபடிப்போட்டியில், அனுப்பர்பாளையம் அரசு பள்ளி - ஜெய்வாபாய் பள்ளி அணியினர் மோதினர்.வடக்கு குறுமையம் சார்பில் கணியாம்பூண்டி மைக்ரோ கிட்ஸ் பள்ளியில் நடந்த கால்பந்து போட்டியில், வீரசிவாஜி பள்ளி - ஏ.வி.பி., பள்ளி அணியினர் விளையாடினர்.