உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மல்பெரி செடி நடவு செய்ய பட்டு வளர்ச்சி துறை மானியம்

மல்பெரி செடி நடவு செய்ய பட்டு வளர்ச்சி துறை மானியம்

உடுமலை;வீரிய ரக மல்பெரி செடி நடவு செய்பவர்களுக்கு பட்டு வளர்ச்சித்துறை சார்பில், மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் அலகு மதிப்பு, 14 ஆயிரம் ரூபாயில், 10 ஆயிரத்து 500 ரூபாய் -மானியமாக வழங்கப்படும்.இதற்கு விண்ணப்பிக்க, நல்ல பாசன நீர் வசதி இருத்தல் வேண்டும். வீரிய ரக மல்பெரி, ஏக்கருக்கு குறைந்தபட்சம், 5 ஆயிரம் நாற்றுகள் வீதம் நடவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நடவு பரப்பு குறைந்த பட்சமாக, ஒரு ஏக்கர் மற்றும் அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் இருக்க வேண்டும்.பயனாளியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்; பயனாளியுடன் மல்பெரி தோட்டத்தின் போட்டோ; பட்டா மற்றும் சிட்டா; அடங்கல், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு நகல், வங்கி பாஸ் புக் நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் மட்டும் ஜாதிச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை சார்பில், பல்வேறு மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவற்றை பெற்று பயனடைய விவசாயிகள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு தங்கள் பகுதியிலுள்ள பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தை விவசாயிகள் அணுகலாம், என, அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை