உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விசேஷங்கள் நிறைவு பூ விலை தலைகீழ்

விசேஷங்கள் நிறைவு பூ விலை தலைகீழ்

திருப்பூர்: கடந்த வாரம் ஆடி வெள்ளி, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை அடுத்தடுத்த நாட்கள் வந்ததால், பூ விலை உயர்ந்தது. மல்லி, முல்லை, அரளி, செவ்வந்தி, பூக்கள் விலை கிலோவுக்கு, 50 முதல், நுாறு ரூபாய் வரை உயர்ந்தன.விசேஷங்கள் நிறைவு பெற்ற நிலையில், நேற்றைய மார்க்கெட்டில், பூக்கள் விலை குறைந்தது. நேற்று மல்லிகை பூ கிலோ, 350 முதல், 400 ரூபாய். முல்லைப்பூ, கிலோ, 200 முதல், 250, செவ்வந்தி, கிலோ, 200, அரளி, கிலோ, 250 ரூபாய்க்கு விற்றது.'வரத்து இயல்பாக இருந்த போதும், விசேஷங்கள் நிறைவால், மொத்த வியாபாரிகள் குறைந்து விட்டனர். ஆகையால், பூக்கள் விலையும் குறைந்து விட்டது. இன்னும் ஒரு வாரம் பூக்களின் விலையில் இப்படித்தான் இருக்கும். ஆவணி முகூர்த்தம் வந்தால், வரத்தை பொறுத்து விலை முடிவு செய்யப்படும்,' என்கின்றனர், பூ வியாபாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி