உள்ளூர் செய்திகள்

புள்ளிமான் மாயம்

அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு காவிலிபாளையம் பகுதியில் தோட்டம் மற்றும் வீடுகள் உள்ளன. அப்பகுதியில் நேற்று மாலை மான் ஒன்று சுற்றி திரிந்தது. அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.வனத்துறையினர் வந்து ஆய்வு செய்து, இரண்டு வயது ஆண் மான் என்றனர். அருகில் உள்ள கோதபாளையம் பகுதியில் அதிக அளவில் மான்கள் வசித்து வருகிறது. அங்கிருந்து வழி தவறி வந்திருக்கலாம் என்றனர்.பொதுமக்களை பார்த்ததும் மான் ஓட்டம் எடுத்து தோட்டத்திற்குள் புகுந்தது. அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை