உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் தேர் அலங்கரிக்கும் பணி

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் தேர் அலங்கரிக்கும் பணி

திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், தேர்த்திருவிழா, 17 ம் தேதி துவங்குகிறது.வரும் 23ம் தேதி விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும், 24ம் தேதி வீரராகவர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இரண்டு தேர்களுக்கும் முகூர்த்தக்கால் நடப்பட்டு, தேரின்மீது சாரம் கட்டும் பணி துவங்கியுள்ளது. தேர் ஆசாரிகள், மிராசுகள், தேர் அலங்கார பணிகளை துவக்கியுள்ளனர்.இரண்டு தேர்களுக்கும் சாரம் அமைக்கப்பட்டு, 19ம் தேதி காலை, கலசம் பொருத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதற்கு பிறகு, புதிய காடா துணி ஓவியங்களை கொண்டு, தேர் அலங்கார பணிகள் வேகமெடுக்குமென, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ