உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடுகளை கடித்து குதறிய தெரு நாய்கள்

ஆடுகளை கடித்து குதறிய தெரு நாய்கள்

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியின், 4வது வார்டு வாவிபாளையம் பகுதியில், பழனிசாமி என்பவர் தோட்டத்தில், ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. நேற்று முன்தினம், தெருநாய்கள் கும்பலாக வந்து, ஆடுகளை கடித்து குதறியுள்ளன. இதனால், மூன்று ஆடுகளும் பரிதாபமாக பலியாகியுள்ளன.இந்நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென, மா.கம்யூ., கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சிகாமணி, மாநகராட்சி கமிஷனருக்கு, அவர் அளித்த மனு:வாவிபாளையம், நெருப்பெரிச்சல், குருவாயூரப்பன் நகர், சேடர்பாளையம், கூலிபாளையம், சமத்துவபுரம், தோட்டத்துப்பாளையம், ஜி.என்., கார்டன் பகுதிகளில், நாளுக்கு நாள் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. ஆடு, மாடுகளை துரத்தி, துரத்தி கடிக்கின்றன.மூன்று ஆடுகளை போல், சிறுவர், சிறுமியரையும், கடித்து குதற வாய்ப்புள்ளது. மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக, தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை