உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விபத்துகளை தடுக்க போராட்டம்

விபத்துகளை தடுக்க போராட்டம்

உடுமலை;உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலத்தில், தொடர் உயிர்ப்பலி ஏற்பட்டு வரும் நிலையில், விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை போராட்டம் நடக்கிறது.உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலம் திட்ட குளறுபடி காரணமாக, அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு, உயிர்களும் பலியாகி வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், அதிகாரிகள் ஆய்வு செய்து, மையத்தடுப்பு, வேகத்தடை மற்றும் பாலம் வடிவமைப்பு மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தொடர் விபத்துக்கள் ஏற்பட்டும் கண்டு கொள்ளாத அதிகாரிகளைக்கண்டித்தும், உடனடி தீர்வு காண வலியுறுத்தியும், நாளை, (19ம் தேதி), காலை, 10:00 மணிக்கு, இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், மேம்பாலம் இறங்கு தளம் அமைந்துள்ள, ஒன்றிய அலுவலகம் அருகே, ரோடு மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், மாவட்ட செயலளார் மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், அப்பாஸ், தெய்வக்குமார், தமிழர் பண்பாட்டு பேரவை செயலாளர் பால் நாராயணன் மற்றும் அக்கட்சயினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்பதாத தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி