உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிப்ட்-டீ கல்லுாரியில் மாணவர் அறிமுக விழா 

நிப்ட்-டீ கல்லுாரியில் மாணவர் அறிமுக விழா 

திருப்பூர்:'நிப்ட் -டீ' கல்லுாரியில், வணிகவியல், கணிணி அறிவியல் மற்றும் மேலாண்மை துறை மாணவர்களுக்கு அறிமுக விழா நடந்தது.வணிகவியல் துறை தலைவர் டாக்டர் கலையரசி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், மாணவர்களிடையே பேசினார். முதல் அமர்வில், குழந்தைகள் நல அலுவலர் ரியாஸ் அகமது பாஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லுாரி சூழலில், மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்வது குறித்தும் பேசினார்.இரண்டாவது அமர்வில், மேலாண்மை துறை தலைவர் டாக்டர் ராதாமணி வரவேற்றார். அமர்ஜோதி நகர் அறக்கட்டளை சார்பில், ஜெயக்குமார், தங்கராஜ், ேஷாபனாதேவி ஆகியோர் பங்கேற்று, மாணவருக்கு ஆலோசனைகள் வழங்கினர். யோகசனங்களின் சிறப்புகளை விளக்கி, தினமும் யோகா செய்வதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி