உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழ்நாடு தினம் பேச்சு போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு தினம் பேச்சு போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

உடுமலை:தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு நடக்கும் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் பங்கேற்கலாம் என, பள்ளி மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில், பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகளை தமிழக அரசும், கல்வித்துறையினரும் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், தமிழகத்துக்கு, ஜூலை 10ம் தேதி 'தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டப்பட்டதன் நினைவாக, தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது.அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவருக்கான, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி, 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு, எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நடக்க உள்ளது.போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய், 7,000 ரூபாய், 5,000 ரூபாய் முறையே, மூன்று இடங்களை பிடிப்பவருக்கு பரிசு வழங்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தி, மாணவ, மாணவியரை தேர்வு செய்ய வேண்டும்.மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரை போட்டி, 'ஆட்சிமொழி தமிழ்' என்ற தலைப்பில் நடக்கும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்