உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்கள் மனித சங்கிலி

மாணவர்கள் மனித சங்கிலி

திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 மற்றும் திருப்பூர் அரிமா சங்கம் இணைந்து, கல்லுாரி வளாகத்தில், 'பெண் சமத்துவ தினம்' முன்னிட்டு, விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மனித சங்கிலி நடத்தப்பட்டது.என்.எஸ்.எஸ்., அலகு - 2, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் காவல்துறை துணை ஆணையர் சுஜாதா பேசினார். மாணவியர் கயல்விழி, இந்துமதி ஆகியோர் சிலம்பாட்டம் ஆடினர். மாணவர்கள் நிதிஷ்வரன், பூபதி ஆகாஷ் ஆகியோர், பெண் கல்வி குறித்து பேசினர். அரிமா சங்க தலைவர் பரமசிவம் பேசினார். மாணவ பிரதிநிதி ரேவதி, நன்றி கூறினார்.மாணவ, மாணவியர், விழிப்புணர்வு வாசகம் தாங்கிய பதாகை ஏந்தியும், துண்டு பிரசுரம் வினியோகித்தும், மனித சங்கிலி நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை