உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு தேவை வெளியுலக அறிவு

மாணவர்களுக்கு தேவை வெளியுலக அறிவு

பள்ளி சென்று, புத்தகங்களை புரட்டுவதால் மட்டும் வெளியுலக அறிவு கிடைத்துவிடாது; புத்தக படிப்புடன், வாழ்க்கைக் கல்வியையும் கற்றுத்தேற வேண்டும் என்ற அடிப்படையில், பெரும்பாலான பள்ளிகள், மாணவ, மாணவியரை ஊக்குவிக்கின்றன.அந்த அடிப்படையில், திருப்பூர், பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களை தயார்படுத்துகின்றனர். பள்ளி நேரம் முடிந்து, முத்தமிழ் சிலம்ப பயிற்சி மையம் சார்பில், மாணவ, மாணவியருக்கு சிலம்ப பயிற்சி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளிகளின் மாணவர்களை சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில், விழிப்புணர்வு நிகழ்வாக, வான் நோக்கு நிகழ்வு நடத்தினர்.பள்ளி அறிவியல் ஆசிரியர் சுரேந்திரன், வானவில் மன்ற ஆசிரியை கிருத்திகா, எஸ்.வி., காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வானவில் மன்ற ஆசிரியர் அஜித்குமார் ஆகியோர் டெலஸ்கோப் உதவியுடன், வான்வெளி விந்தையை மாணவர்களுக்கு விளக்கி, அவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தினர். மாணவர்களுடன், பெற்றோரும் திரளாக பங்கெடுத்தது, கூடுதல் சிறப்பு.பள்ளி தலைமையாசிரியை மலர்விழி கூறுகையில்,'மாணவ, மாணவியருக்கு அறிவியல் விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்படுவதால், அறிவியல் கண்டுபிடிப்புகளில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கிறது. பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைத்து, காய்கறி பயிரிடுவதை மாணவர்கள் வாயிலாகவே செய்து வருகிறோம்.வெளியுலக அறிவையும் மாணவர்களுக்கு புகட்டுவதால், மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு தொடர்ந்து அதிகரிக்கிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை